வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு உயிர் செத்தாதான் இப்படிபட்ட காவலர்களின் உண்மைகள் வெளியில் வரும்னும் இந்த மாதிரி ஒரு வீடியோ வைரல் ஆனாதான் உண்மை என்றும் நினைக்காதீங்க சாமி. பலரும் நடைப்பிணங்களாக உள்ளனர் இந்த திருவான்மியூரில் நடத்தப்படும் இந்த மாதிரி இவர்களின் அவலச் செய்கைகளால் வெளியில் தெரியப்படுத்தாமல். மெரினாவைத் தொடர்ந்து இங்கும் இப்படிப்பட்ட காவலர்களால்.
இந்தம்மா சொல்றது உண்மைதான்.
காவல் நிலையத்திலும் கூட சில குற்றங்கள் பணத்தை வாங்கி மறைக்கின்றனர்... ஒரு பெண்ணின் தந்தை அவள் செய்த பல காதல் குற்றங்களை மறைத்து பையனை மட்டும் வண்டியில் ஏற்றிச்சென்று அடித்து ஆண்மகனின் வீட்டிலிருந்து லட்சக்கணக்கில் பணம் கேட்டு வாங்கியுள்ளனர் காவலர்கள். சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த பையனின் வீட்டில் பணம் வாங்கி இன்னொருவனுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். சிறுமியின் வீட்டில் பையன்கள் இருவரையும் சிறையலடைத்துள்ளோமென்று கூறியுள்ளனர். ரோந்தில் வருபவர்கள் குடித்துவிட்டு வருவதுண்டு. செக்கிங் செய்கிறேனென்று உடலின் பாகத்தை தொட்டுப் பார்க்கிறார்கள், மொபைலை புடுங்கி பின்னாடியே அவர்களை நடக்க வைப்பதுமுண்டு. Boots காலால் எட்டி உதைப்பதுமுண்டு. பெயரைக் கேட்டால் சொல்லாமல் இருப்பார்கள், name badge இருக்காது.
அய்யா வணக்கம், இந்தம்மாவ எனக்கு நல்லா தெரியும். தினசரி குழந்தைகள் மாதிரி நாய்களுக்கு உணவு கொடுப்பாங்க அந்த இடங்களில். வண்டியில் உணவு, தண்ணீர், தட்டுகள் இருக்கும். இந்த கார்த்தி, செல்வராஜ், சேகர் மற்றும் 10-15 பேர்கள் பலரும் திருவான்மியூரில் இவங்க வெக்கிற இடத்துல யாரும் உட்காரவோ, நிற்கவோ செய்யாமல், 1-3 காவலர்கள் வந்து விரட்டி விடுவாங்க, ஏன்னா மாலை மற்றும் இருட்டுல வர்ற இளைஞர்கள் கிட்ட அதட்டி, மிரட்டியடித்து, பேசி பணம்/மொபைல்/கேமரா போன்ற பொருட்களை புடுங்குகின்றனர். ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்து கொள்வதுமுண்டு. சிலர் வண்டியில் கூட்டி அறைக்கு அழைத்து செல்வதுமுண்டு. அறுபடை வீடு கோவிலுக்கு இந்த பக்கமும், அந்த பக்கமும் கடற்கரையில் தினசரி 6000௹ வருபர்களை மிரட்டி வசூலிப்பதுண்டு. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான், அது போல் இந்த காவலர்கள் என்னிடமே பல முறை அகப்பட்டு உள்ளார்கள். இது அவர்களுக்கே தெரியும். இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்வார்கள், பின்பு நோட் புக்கில் பேனாவை வைத்து எழுதி விலாசத்தை வாங்குவார்கள், அதனால் நான் காவல் நிலையத்தில் நம்பி செல்ல முடியவில்லை. இவரின் வீடியோ எடுத்ததை என்னிடமே உள்ளது. தவறு நடக்காம பாதுகாக்கணுமே தவிர தவறு நடக்கிற மாதிரி இருட்டுல மறைஞ்சி சிறிது நேரம் ஒழிந்து நின்னு பார்த்த பின்பு கூட்டணியா வந்து ஃபோட்டோ எடுக்கறது, வீடியோ எடுக்கறது, அடிக்கிறது, பெட்டி கேஸ் போடறேன் காவல் நிலையத்திற்கு வந்து ஃபைன் கட்டி பொருட்களை எடுத்துட்டு போ என்றும் கூறுவார்கள். இந்த கடற்கரையில் அபாயம் எதுவுமில்லாமல் இருந்தது முன்பு ஆனால் இப்பொழுது தவறுகள் செய்யும் திருவான்மியூர் காவலர்கள்தான் அதிகம். மெரினாவில் நடப்பது போன்று இங்கும் நடக்கின்றது.