உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டம் வென்றார் சாத்வி சதீஷ் செயில் | Femina Miss India World 2026

பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டம் வென்றார் சாத்வி சதீஷ் செயில் | Femina Miss India World 2026

இந்த ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா (Femina Miss India) அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிப் போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்தது. நாடு முழுதும் இருந்து 30 இளம் பெண்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். உடல் அழகு, நடை அழகு, பொது அறிவு, வாழ்க்கை முறை, நல்லெண்ண துாதர் என பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் கோவாவை சேர்ந்த சாத்வி சதீஷ் செயில் 2026ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக தேர்வானார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற சாத்விக்கு, கடந்த ஆண்டு மிஸ் இந்தியா வென்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிகிதா ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை சூட்டினார். மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ் நந்தினி இரண்டாம் இடமும், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த அத்வைதா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

ஏப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !