உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை அறிவித்தார் நிர்மலா Finance Budget| Union Budget| Nirmala | BJP| Modi

பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை அறிவித்தார் நிர்மலா Finance Budget| Union Budget| Nirmala | BJP| Modi

மாத சம்பளதாரரர்களுக்கான வருமான வரியில் மாற்றம் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்டு வருவாய்க்கான ஸ்டாண்டர்டு டிடக்சன் எனப்படும் நிரந்தர கழிவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரிமுறையை பின்பற்றுவோர், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டினால் அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 3 முதல் 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி; 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீதமும்; 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும்; 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என நிர்மலா அறிவித்தார். அதே போல், ஓய்வூதியம் பெறுவோருக்கான நிரந்தரக் கழிவு 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாத சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு 17,500 ரூபாய் வரை வருவான வரியை மிச்சப்படுத்தலாம் என அமைச்சர் நிர்மலா கூறினார்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை