உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை முதியோர் இல்லத்தில் தீ: 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ: 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு

#FireAccident #SrilankaFire #SrilankaNews #FireatOldageHome #OldageHome #Fire அண்டை நாடான இலங்கையின் அங்குருவடோட்டாவில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்படுகிறது. முதியோர் இல்லத்தில் 71 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டது. எனினும் மரக்கதவுகள், மர சாமான்கள் அதிகம் இருந்ததால் கட்டடத்தின் பெரும்பாலான பகுதி தீக்கிரையானது. பெரும் போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்த நிலையில், கட்டத்திற்குள் சிக்கி தீயில் கருகிய நிலையில் 10 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 7 பேர் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவக்கியுள்ளனர். முதியோர் இல்லத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்து, கட்டடம் முழுதும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதியோர் இல்லத்தில் கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தடுத்த விசாரணையில் துயர சம்பவத்திற்காக முழு காரணம் வெளியாகும் என அதிகாரிகள் கூறினர்.

ஜூன் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை