செங்கமலப்பட்டி பட்டாசு குடோன் வெடி விபத்து கொடூரம் | firecrackers | sengamalapatti | sivakasi
விருதுகர் செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோனில் நேற்று வெடி விபத்து நிகழ்ந்தது. உரிமையாளர் ராம்பிரகாஷ் இன்னாசி முத்து, அய்யப்பராஜ் பாண்டித்துரை ஆகிய 4 பேர் இறந்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ராமசந்திரன் என்பவரும் இறந்தாதல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் பீஸ் பீஸ் ஆகின. உடல் உறுப்புகள் 50 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன. அவற்றை தேடி எடுக்கவே சுமார் 3 மணிநேரம் ஆனது. யாருடைய உறுப்பும் முழுமையாக கிடைக்காததால் ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது, சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தம் கேட்டு இருக்கிறது. அருகே இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. விபத்து இடத்தில் இருந்த பட்டாசு மூலப்பொருள் கொண்டுவந்த கார் மற்றும் பைக் ஆகியவை எரிந்தன.