உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வலியுறுத்தல்

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் மீன்வர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவு அருகே இந்த சம்பவம் நடந்ததாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டில் குண்டு அடிப்பட்ட 2 மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை துணை தூதரை வரவழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும், இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் பலத்தை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கையை வலியுறுத்தியது.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ