40 கிலோ எடையில் அரிய வகை கடல் பாலூட்டி | Fishermen | Thanjavur | Mammals
தஞ்சாவூர் , கொல்லுகாடு பகுதியை நான்கு மீனவர்கள் அதிராம்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்த போது கடல் பசுவை போன்ற தோற்றம் கொண்ட கடல் விண்ணி சிக்கியது. 1.5 மீட்டர் நீளத்தில் 40 கிலோ எடை கொண்ட அந்த அரிய வகை கடல் பாலூட்டி உயிருடன் இருந்தது. மீனவர்களால் இது வின்னிக்குட்டி எனவும் செல்லமாக அழைக்கப்படுகிறது. வலையில் சிக்கிய விண்ணியை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர். இதை வீடியோ பதிவு செய்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனுக்கு அனுப்பினர்.
நவ 25, 2024