/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி - பழவேற்காடு மீனவர்கள் மோதலால் பதட்டம் | Fishers clash | Pazhaverkadu | Puducherry
புதுச்சேரி - பழவேற்காடு மீனவர்கள் மோதலால் பதட்டம் | Fishers clash | Pazhaverkadu | Puducherry
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் இன்று அதிகாலை வழக்கம்போல் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது 5 நாட்டிக்கல் தூரத்திலேயே புதுச்சேரி மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன்பிடித்துள்ளனர். தங்கள் எல்லை பகுதியில் வந்து மீன் பிடித்ததால் பழவேற்காடு மீனவர்கள் தட்டி கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த பாண்டிச்சேரி மீனவர்கள், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் பழவேற்காடு மீனவர்களை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். (பிரத்) இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர்.
ஆக 05, 2024