உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லக்கி நம்பர் சோகமாக மாறிய சம்பவம் | Vijaybhai Rupani | Gujarat's Ex CM | Flight Crash

லக்கி நம்பர் சோகமாக மாறிய சம்பவம் | Vijaybhai Rupani | Gujarat's Ex CM | Flight Crash

குஜராத் ஆமதாபாத்தில் இருந்து நேற்று 242 பேருடன் லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் இறந்தனர். விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில் மாணவர்கள் 24 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர். விபத்து நடத்த இடத்தில் ஆய்வு செய்து இறந்தவர்கள் குடும்பத்தினரையும், சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறி உள்ளார். உடல் கருகி இறந்தவர்களின் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இறந்த பலரின் கதைகளை கேட்டாலே மனது கனக்கிறது. அப்படி விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி. 2016 முதல் 2021 வரை குஜராத்தின் முதல்வராக பதவி வகித்தவர். லண்டனில் உள்ள மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விமானத்தில் பயணித்திருந்தார். ரூபானியின் லக்கி நம்பரே அவரது மரணத்திலும் வந்தது தெரிய வந்துள்ளது. விஜய் ரூபானிக்கு 1206 என்பது ராசியான நம்பராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அவர் வைத்து இருந்த ஸ்கூட்டரில் இருந்து முதல்வராக பதவி வகித்த போது வைத்திருந்த அரசு கார் வரை அனைத்திற்கும் 1206 என்பதே பதிவு எண்ணாக இருந்துள்ளது. லக்கி நம்பருடனான தொடர்பு கடைசியில் மரணத்தில் முடிந்து உள்ளது. அவர் இறந்த தேதி 12ம் தேதி ஆறாவது மாதமாக உள்ளது. 12 மணி 10 நிமிடங்களுக்கு போர்டிங் பாஸ் வாங்கி உள்ளார். அவரது விமான சீட் எண்ணும் 12 ஆக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூபானி வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ