/ தினமலர் டிவி
/ பொது
/ பூண்டி ஏரி திறக்கப்பட்டதால் பீதி: வீடுகளை காலி செய்யும் மக்கள் | Flood Evacuation | Poondi Lake
பூண்டி ஏரி திறக்கப்பட்டதால் பீதி: வீடுகளை காலி செய்யும் மக்கள் | Flood Evacuation | Poondi Lake
கனமழையால் சென்னை, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது செங்குன்றம்,மாதவரம், சடையாங்குப்பம் வழியாக எண்ணூர் முக துவாரம் சென்று கடலில் கலக்கும். இதனால் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துவிடுமோ என்கிற அச்சத்தில் சடையாங்குப்பம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே இங்குள்ள ஐந்து தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வந்து பார்க்கவில்லை. இனியும் இங்கே இருக்க முடியாது. எங்களை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு போகிறோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.
அக் 26, 2025