உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் முழுவதும் ஆபத்தை உணராமல் நடக்கும் சம்பவங்கள் | Flood | Rain | Rescue

தமிழகம் முழுவதும் ஆபத்தை உணராமல் நடக்கும் சம்பவங்கள் | Flood | Rain | Rescue

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகள், குளங்கள், ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விழுப்புரத்திலும் கனமழை பெய்தது. அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி காணப்படுகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பல பகுதிகளில் மக்கள் மீன்பிடித்தும், ஆற்றில் இறங்கி குளித்தும் வருகின்றனர். விழுப்புரம் கிளியனூர் அருகே உள்ள கொஞ்சிமங்கலம் பகுதியை சேர்ந்த ஏழு சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன் புதுகுப்பம ஏரியில் குளித்துள்ளனர். அப்போது நீர் வரத்து அதிகமாக இருந்ததால் சிறுமிகள் நர்மதா, அனுஸ்ரீ வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரம் வெள்ளம் இழுத்து சென்ற நிலையில் நர்மதா ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் இறந்தார்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை