டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை| Flood Warning | Mettur Dam Over flow | Salem
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டின. அணைகளுக்கு வரும் நீர் முழுதும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அப்போது, அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் அடி நீர் வந்து கொண்டிருந்தது. முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களின் கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, வினாடிக்கு 75 ஆயிரம் முதல் ஒரு கனஅடி நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.