உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் | 127th Flower exhibition | M.K.Stalin |

127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் | 127th Flower exhibition | M.K.Stalin |

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். சீசன் சமயத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை திறந்து வைத்து மலர் அலங்கார சிற்பங்கள் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். குறிப்பாக ராஜராஜ சோழன் சிம்மாசனத்தில் மனைவி துர்கா மற்றும் அமைச்சர்களுடன் அமர்ந்து போட்டோ எடுத்தது அனைவரையும் கவர்ந்தது. (பிரத்) மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை