கோடரி மூலம் தாக்குதல்; தோண்ட தோண்ட கிடைக்கும் தகவல்கள் | fly dubai incident | captain smit machchar
கோடரி மூலம் தாக்குதல்; தோண்ட தோண்ட கிடைக்கும் தகவல்கள் | fly dubai incident | captain smit machchar செப்., 30ல் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளை துபாய் விமானம் பறந்தது. நடுவானில் அதன் துணை விமானி விமானத்தை கடத்த முயன்றார். அதை தடுத்த நம் நாட்டு விமானி ஸ்மிட் மச்சார் கடுமையாக தாக்கப்பட்டார். வெட்டு காயங்களுடன் ரத்தம் சொட்டிய போதும் விமானத்தில் இருந்த 180 பேரின் உயிரை காப்பாற்றி பாதுகாப்பாக தரையிறக்கினார். இது ஒரு பயங்கரவாத செயல் என்பது உறுதியானதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்ட இந்திய விமானிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவருடைய உடல்நிலை தேறி வருவதாகவும் யு.ஏ.இ.,யில் உள்ள நம் நாட்டு துாதரகம் தெரிவித்துள்ளது. கைதான துணை விமானி குறித்து சவுதி அரேபியா நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை விமானியின் பெயர் ஹமாம் அல் ஹம்மாமி, வயது 29, ஓமனை சேர்ந்தவன். இவனது தந்தை ஓமனையும், தாய் சிரியாவையும் சேர்ந்தவர்கள். ஹம்மாமி சிரியாவில் தீவிரவாத குழுக்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுள்ளான். 2024ல் ஓமன் அரசின் ஓமன் ஏர் நிறுவனத்தில் விமானியாக பயிற்சி முடித்தான். அவனுடைய சமூகவலைதள கணக்குகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓமன் அரசு ஹம்மாமி விமானங்களை இயக்க தடை விதித்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் அந்த நிறுவனத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டான். #Flydubaiincident | #captainsmitmachchar | #OmanBilot | #Investigation | #UAE