உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹785 கோடியில் நாடு முழுவதும் மிகப்பெரிய திட்டம் | 730 Fm Radio Stations | Cabinet Approval

₹785 கோடியில் நாடு முழுவதும் மிகப்பெரிய திட்டம் | 730 Fm Radio Stations | Cabinet Approval

தமிழகத்தில் 11 நகரங்களில் புதிய FM ரேடியோ ஸ்டேஷன் நாட்டில் புதிதாக 730 தனியார் எப்.எம். ரேடியோ நிலையங்கள் அமைப்பதற்கான ஆன்லைன் ஏலத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 784.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 234 நகரங்களில் இந்த ரேடியோ நிலையங்கள் அமைய உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 32 நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும். அதற்கு அடுத்து ஆந்திராவில் 22, மத்திய பிரதேசத்தில் 20 நகரங்களில் எப்.எம். ரேடியோ நிலையங்கள் அமைகின்றன. தமிழகத்தில் திண்டுக்கல், காரைக்குடி, குன்னூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வாணியம்பாடி நகரங்களில் புதிய தனியார் எப்.எம். ரேடியோ நிலையங்கள் வர உள்ளன. புதிய ரேடியோ நிலையங்களால் வேலை வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் மொழி, கலாசாரம் ஊக்குவிக்கப்படும் என மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி