உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் பகீர் சம்பவம் | Food inspection| Toddler biscuits and chocolates| chi

ென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் பகீர் சம்பவம் | Food inspection| Toddler biscuits and chocolates| chi

குழந்தைங்க சாப்பிடுற ஸ்நாக்ஸ்ல இப்படி ஒரு விஷயம் இருக்கா? இத விக்குறதுக்கு எப்படி மனசு வந்துச்சு? சரியா கவனிக்கலனா உயிருக்கே ஆபத்து ஆகிடும் வாரச் சந்தைக்கு போறீங்களா? வார்னிங் கொடுத்த ஆபீஸர்ஸ் திரும்புற பக்கமெல்லாம் சாப்பாடுல கலப்படம் தான் . அதுலயும் குழந்தைங்க விரும்பி சாப்பிடுற பிஸ்கட், சாக்லேட், கேக் எல்லாம் பாத்து பாத்து வாங்க வேண்டி இருக்கு. சென்னை பல்லாவரம் சந்தை வார வாரம் வெள்ளிக்கிழமை நடக்கும். கம்மி விலையில சந்தையில மொத்தமா கிடைக்குற ஸ்நாக்ஸ்ஸ வாங்குறதுக்கு தனி கஸ்டமர் பட்டாளமே இருக்கு. நேத்து வாரச் சந்தையில ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துச்சு. திடீர்னு கூட்டத்தோட கூட்டாமா food safety officers நுழஞ்சாங்க. கடையில விக்குற ஸ்நாக்ஸோட தரத்த சோதனை செஞ்சாங்க. அப்போ தான் ஆபீஸர்ஸ் அந்த தில்லாலங்கடி வேலய கவனிச்சாங்க. எந்த ஸ்நாக்ஸ்லயுமே expiry date இல்ல. சம்பந்தப்பட்ட கட ஓனர் முறையான விளக்கம் கொடுக்கல . Food safety officers சம்பந்தப்பட்ட கடையிலருந்து மூட்ட மூட்டையா expiry ஆன ஸ்நாக்ஸ பறிமுதல் செஞ்சாங்க. மோசடில ஈடுபட்ட வியாபாரிங்கல பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் பண்ணாங்க விசாரணை தொடருது. குழந்தைக்கு வாங்குற சின்ன சாக்லேட்டா இருந்தா கூட பெத்தவங்க expiry date பாத்து வாங்கணும். கெட்டுப்போன பொருட்கள சாப்பிட்டா குழந்தைங்க உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்னு food safety officers warning கொடுத்திருக்காங்க #Childrensnacks #FoodSafetyRaid #ExpiredSnacks #ChildSafetyFirst #PublicHealth #FoodSafetyTamilNadu #TNNews #ChennaiNews #WeeklyMarket #ConsumerAwareness #FoodSafetyDept #LawEnforcement #SafetyRaid #BanExpiredProducts #ProtectChildren #PublicAlert #MarketInspection #TamilNewsUpdate #AwarenessMatters #Pallavaram #chennai #Dinamalar

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை