தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு Former AIADMK MLA Sudarshanm
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005ம் ஆண்டு இவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த கும்பல் சுதர்சனத்தை சுட்டுக்கொன்றது. மனைவி, மகன்களை தாக்கி 62 பவுன் நகைகளை கொள்ளையடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, ஹரியானாவை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஓம் பிரகாஷ், அவரது தம்பி ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் ஓம் பிரகாஷ் சிறையிலேயே இறந்தார். எஞ்சிய 4பேர் மீதான விசாரணை சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 86 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த 21ம் தேதி ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கம் அறிவித்தார். #FormerMlaMurderCase #Threeconvicts #AwardedLifeImprisonment #BawariaGang #SudarsanamCase