உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக முன்னாள் எம்.பி. வழக்கு:போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கைFormer MP Gnanathiraviam||CH High court

திமுக முன்னாள் எம்.பி. வழக்கு:போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கைFormer MP Gnanathiraviam||CH High court

திருநெல்வேலி தொகுதி திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கும், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ பேராயர் பர்னபாஸூக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. 2023 ஜூன் 26ல் பேராயர் பர்னபாஸூக்கு நெருக்கமான மத போதகர் காட்ஃபிரே நோபில் சிஎஸ்ஐ டயோசீஸ் அலுவலகம் வந்தார். அப்போது திருநெல்வேலி தொகுதி எம்.பி.யாக இருந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அலுவலக வளாகத்தில் காட்ஃபிரே நோபிலை தாக்கினர். இது தொடர்பாக காட்ஃபிரே அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் ஐகோர்ட்டில் மனு செய்தார். நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. அதே சமயம், நெல்லை கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக்கோரி மதபோதகர் காட்ஃபிரே ஐகோர்ட்டில் ஒரு மனு செய்தார். அம்மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன் இன்று நடந்தது.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை