வயலில் வேலை பார்த்தபோது மாஜி தாசில்தாருக்கு சோக முடிவு Former Tahsildar hacked to death | Trichy
தமிழகத்தில் சமீப நாட்களாக கொலைகளும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் வரிசையாக நடப்பது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில் ஓய்வு பெற்ற தாசில்தார் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தை உலுக்கி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: திருச்சி மாவட்டம் தாயனூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி 65. ஓய்வு பெற்ற தாசில்தார். இவர் தாயனூர் குஞ்சாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார் அதே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அசோக்குமார் என்பவரும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அசோக்குமார் அந்த கோயிலில் குறி சொல்லும் பூசாரியாக உள்ளார். கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தபோது வாய்க்கால் வெட்டுவதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.