உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ்சை சிறை பிடித்த கிராம பெண்களின் வீடியோ வைரல் | Govt Free Bus | Bus Video Viral | virudhunagar

பஸ்சை சிறை பிடித்த கிராம பெண்களின் வீடியோ வைரல் | Govt Free Bus | Bus Video Viral | virudhunagar

நிற்காமல் சென்ற ப்ரீ பஸ் கம்பு, கட்டையுடன் மறித்த பெண்கள் விருதுநகர் , அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளத்துக்கு மகளிர் கட்டணமில்லா அரசு பஸ் இயங்கி வருகிறது. நேற்று காலை இந்த பஸ் பள்ளிமடம் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றது. பஸ்சில் ஏற வந்த பெண்களை சாந்து தட்டு, மண்வெட்டியுடன் ப்ரீ பஸ்சில் பயணிக்க கூடாது. அப்படி பொருட்களோடு வந்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் பஸ் நிற்காது என டிரைவர் மற்றும் கண்டக்டர் அலட்சியமாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த பெண்கள் அதே பஸ் காரைக்குளம் சென்று திரும்பி வந்த போது ஊரணிப்பட்டி அருகே கம்பு கட்டையுடன் மறித்தனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை