உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விண்வெளி ஆய்வில் சாதிக்கும் இந்தியா: ராஜ்நாத் Gaganyaan Mission| Rajnath Singh | ISRO

விண்வெளி ஆய்வில் சாதிக்கும் இந்தியா: ராஜ்நாத் Gaganyaan Mission| Rajnath Singh | ISRO

ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதவதற்கான பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. சந்திரயான், மங்கள்யானை தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர்களின், விஞ்ஞானிகளின் மைல்கல்லாக ககன்யான் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வாகி, அதற்கான பயிற்சி எடுத்து தயாராகியுள்ள இந்திய வீரர்கள் நால்வருக்கு டில்லியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், விண்வெளி வீரர்களான சுபான்ஷு சுக்லா, பி.வி.நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. வெறும் சாட்டிலைட்டுகளை ஏவுவதோடு நில்லாமல், நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி நாம் சாதித்துள்ளோம். விண்வெளித்துறையில் நாம் படைத்து வரும் சாதனைகளை உலகம் உற்று நோக்குகிறது. அடுத்தபடியாக ககன்யான் திட்டத்தின் மூலம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். இது வெறும் தொழில்நுட்ப ரீதியிலான சாதனை மட்டுமல்ல. சுயசார்பு இந்தியா என்ற கொள்கையின் வெற்றியாகவே இதை பார்க்கிறேன். விண்வெளி ஆய்வில் சாதிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் மிகப் பெரிய இடம் பிடித்துள்ளது. விண்வெளி ஆய்வை நாம் வெறும் அறிவியல் ஆராய்ச்சியாக மட்டும் பார்ப்பதில்லை. பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மனித வளத்திற்கு பல்வேறு வகைகளில் இது பயன்படுகிறது. ககன்யான் திட்டத்திற்காக தேர்வாகி அதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ள 4 வீரர்களையும் பார்த்து வியக்கிறேன்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ