பார்லியில் புயலை கிளப்பிய நரவனே புத்தகம் |Galwan attack |naravane book row| india vs china | modi
எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டின் இரு சபைகளையும் தொடர்ந்து முடக்க காரணமே ஒரு புத்தகம் தான். அந்த புத்தகத்தின் சில பகுதிகளை சபையில் படிக்க முயற்சித்தார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல். வெளியாகாத புத்தகத்தில் இருக்கும் பகுதிகளை சபையில் படிக்கக் கூடாது என்று சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால் தான் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து சபையை முடக்க ஆரம்பித்தனர். கேரவன் என்ற ஆங்கில இதழில் இந்த புத்தகத்தின் சில பகுதிகள் வெளியாகி உள்ளன. அதைத் தான் ராகுல் படிக்க முயற்சித்தார். அந்த ஆங்கில புத்தகத்தின் பெயர் போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி. இதை எழுதியவர் நம் முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே. 2019 டு 2022 வரை ராணுவ தளபதியாக இருந்தவர். 2020ல் இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை சண்டை நடந்தபோது தளபதியாக இவர் தான் இருந்தார். அந்த சமயத்தில் மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து விளக்கமாக எழுதியுள்ளார் நரவனே. அதில் அரசுக்கு எதிரான பல அம்சங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முப்படை தளபதியாக இவர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது; ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை தனக்கு அந்த பதவி கிடைக்காத வெறுப்பில், ராகுலிடம் இந்த புத்தகத்தை கொடுத்து விட்டாரா நரவனே என்று கூட டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.