12 ஏக்கர் கங்கமநாயக்கன் குட்டையில் நிரம்பும் மழைநீர் | Gangamanayakan Pond | Appanaickanpatti
கோவை சுல்தான்பேட்டை ஒன்றியம், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது கங்கமநாயக்கன் குட்டை. தரையில் இருந்து சுமார் 12 அடி உயரத்தில் இருக்கிறது. தண்ணீர் வரத்து இல்லமால் பல ஆண்டுகளாக காய்ந்து கிடந்த இந்த குட்டையை ஊராட்சி தலைவர் சாந்தி, ஊர்மக்கள் இணைந்து தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தூர்வாரினர். அடைந்து கிடந்த நீர்வழித்தடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. மழை பெய்தால் நீரை பம்ப் செய்து குட்டைக்கு அனுப்ப சமமட்ட அளவில் குழாய் அமைத்து புதிய திட்டத்தை செயல்படுத்தினர். கை மேல் பலன் கிடைத்தது போல் சமீப நாட்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. தடுப்பணைகள் நிரம்பி தாழ்வான பகுதியில் சேர்ந்த மழை நீரை 2 நாட்களாக கங்கம நாயக்கன் குட்டையில் சேமிக்கும் பணி நடக்கிறது. அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் பெருகி இருப்பதால் விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திட்டம் வெற்றி அடைந்தது குறித்து ஊராட்சி தலைவர் சாந்தி, வெளியூரில் இருந்து செல்போனில் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.