சிலிண்டர் வெடித்ததில் பரிதாபமாக பறிபோன உயிர்கள் | Gas sylinder blast | Welding shop | 5 Died | Visa
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியில் இமாலயா பார் அருகே சாலையோரம் சிறிய கட்டடத்தில் வெல்டிங் கடை இயங்கி வந்தது. இன்று மாலை வழக்கம்போல் கடையில் வாகனம் ஒன்றுக்கு வெல்டிங் வைக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கடை கட்டடம் தரைமட்டமானது. சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேலும் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. சம்பவ இடத்தில் அடையாளம் காண முடியாத அளவில் ஆங்காங்கே சிதறி கிடந்த உடல்களை கைப்பற்றிய முதலாவது நகர போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சிலிண்டர் வெடித்து 5 பேர் உடல் சிதறி இறந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.