/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி பொம்மைக்குபுவிசார் குறியீடு | Geographical indication | Central Govt
மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி பொம்மைக்குபுவிசார் குறியீடு | Geographical indication | Central Govt
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இப்போது மதுரை மரிக்கொழுந்து , விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு இந்திய தொழில்துறை சார்பில் புவிசார் குறியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார் 27, 2025