உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் உச்சகட்ட பரபரப்பு | Get out modi | Get out stalin | Poster |

மதுரை முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் உச்சகட்ட பரபரப்பு | Get out modi | Get out stalin | Poster |

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயன்றால் இந்த முறை கெட் அவுட் மோடி என்று தமிழக மக்கள் துரத்துவார்கள் என துணை முதல்வர் உதயநிதி சமீபத்தில் கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என சொல்லிப்பார் என அண்ணாமலை சவால் விடுத்தார். அப்படி சொன்னால் உங்கள் வீட்டுக்கு வெளியே பால்டாயில் பாபு என போஸ்டர் ஒட்டுவேன் என்றார். அதற்கு பதில் அளித்த உதயநிதி, தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள் என பதில் சவால் விடுத்தார். திமுகவினரே நாள் நேரம் குறிக்கட்டும் தனி ஆளாக வருகிறேன் என்று பதிலடி கொடுத்த அண்ணாமலை, கெட் அவுட் மோடியா.? கெட் அவுட் ஸ்டாலினா.? எது இணையத்தில் வைரலாகும் என்று பார்க்கலாம் என்றும் சவால் விடுத்தார். அண்ணாமலை - உதயநிதி இடையே வார்த்தைப்போர் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், பாஜ-திமுகவினர் மாறி மாறி கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என பதிவிட்டு வருகின்றனர். இது போதாதென்று தமிழ் வாழ்க, கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்ற போஸ்டர்களும் வைரலாகி வருகிறது.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை