உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டோவில் ஏறிய சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் | Girl abducted | police encounter | Auto driver

ஆட்டோவில் ஏறிய சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் | Girl abducted | police encounter | Auto driver

சிறுமியை கடத்தி சென்று சீரழித்த கொடூரன்கள்! சுட்டு பிடித்த போலீஸ் உத்தரபிரதேசத்தின் பண்டாவில் நேற்று 15 வயது சிறுமி ஒருவர் டியூஷன் சென்டரில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ பிடித்துள்ளார். அதில் ஆட்டோ டிரைவரின் நண்பரும் இருந்துள்ளார். சிறுமியை வீட்டில் இறக்கி விடாமல், இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த இருவரும், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து வெளியேறி அருகில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அங்குள்ள மக்கள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த கோட்வாலி நகர போலீசார், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர். சிறுமியின் வாக்குமூலம், சிசிடிவி காட்சிகளை வைத்து, ஆட்டோவையும் அதன் டிரைவரையும் அடையாளம் கண்டுபிடித்தனர். ஆட்டோ டிரைவர் அங்கித் வர்மா என்பதும், அவனது கூட்டாளி கல்லுவா எனும் மனோஜ் யாதவ் என்பதும் தெரிந்தது. கரியா நாலா பகுதி அருகே நண்பருடன் டிரைவரும் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் சுற்றிவளைத்தனர். அப்போது இருவரும் போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் காலில் காயமடைந்து விழுந்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்ததாக எஸ்.பி சிவராஜ் கூறினார். கைதானவர்களிடம் இருந்து ஆட்டோ, சட்டவிரோத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ