உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தண்டவாளத்தில் சம்பவம்; பீகார் இளம்பெண் காமெடி | Girl Railway track | Bihar

தண்டவாளத்தில் சம்பவம்; பீகார் இளம்பெண் காமெடி | Girl Railway track | Bihar

டிராக்கில் தலை வைத்த பெண் பதறிப்போன ரயில் டிரைவர் கடைசியில் ட்விஸ்ட் பீகார் மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் இருந்து முசாபர்பூர் பகுதிக்கு ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. சக்கியா ரயில் நிலையம் அருகே சென்ற போது, தண்டவாளத்தில் ஒரு இளம்பெண் படுத்திருந்தார். அதை பார்த்த டிரைவர், பதறி போனார். உடனடியாக அவசர கால பிரேக்கை பிடித்து ரயிலை உடனே நிறுத்தினார். ஆனாலும் ரயில் நிற்கவில்லை. இளம்பெண் அருகே வரை சென்றபிறகுதான் ரயில் நின்றது. இன்ஜின் டிரைவர் சந்தேகத்துடன் ரயிலில் இருந்து குதித்து ரயிலுக்கு அடியில் பார்த்தார். பெண் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என சந்தேகம் அவருக்கு. ரயிலுக்கும், தண்டவாளத்தில் படுத்திருந்த பெண்ணுக்கும் சில அடி தூரம்தான் இருந்தது. உடனே அந்தப் பெண்ணுக்கு ஏதும் காயம் ஏற்பட்டுள்ளதா? மூச்சு இருக்கிறதா என டிரைவர் செக் செய்து பார்த்தார். அப்போது, டிரைவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். காரணம் அந்தப் பெண் குரட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். எம்மா எழுந்திரு... என அந்தப் பெண்ணை தட்டி எழுப்பினார். சில நிமிடங்களுக்கு பிறகு விழித்த அந்த பெண் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை