காதலியை தனிமையில் பார்க்க இப்படியுமா? ஷாக் வீடியோ | Girlfriend | Boys hostel | Suitcase
கல்லூரி வாழ்க்கை பற்றி சினிமாவில் காட்டப்படுவதெல்லாம் இப்போது நிஜத்திலும் அரங்கேறி வருகிறது. ஹாஸ்டலுக்கு சூட்கேஸ் தூக்கி வந்த மாணவனை நிறுத்தி சோதனை செய்த போது அங்கே என்ன நடந்தது என்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே பிரபல பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கே இருபாலரும் தங்கி படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் பாய்ஸ் ஹாஸ்டலுக்கு ஒரு மாணவன் சூட்கேஸ் உடன் வந்துள்ளான். வழக்கத்துக்கு மாறாக சூட்கேஸ் பெரிய அளவில் இருந்துள்ளது. நகர்த்த முடியாமல் நகர்த்திக்கொண்டு வந்துள்ளான். அப்போது ஹாஸ்டல் வாசலில் இருந்த செக்யூரிட்டிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. சூட்கேஸ் திறந்து காட்ட வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மாணவன் மறுத்துள்ளான். ஏதோ தவறு நடக்கிறது என புரிந்து கொண்ட செக்யூரிட்டிகள் சூட்கேஸ் மீது கை வைத்துள்ளனர். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் திறந்து பார்த்த போது உள்ளே ஒரு பெண் சுருண்டு படுத்திருந்தார்.