உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஃபுல் போதை ஆன கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

ஃபுல் போதை ஆன கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவி, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஏகாட்டூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். ஊருக்கு சென்று விட்டு திரும்பிய மாணவி, சக தோழிகளுடன் விடுதி அறையில் மது பார்ட்டியில் கலந்து கெண்டுள்ளார். விடிய விடிய நடந்த பார்ட்டியில் மாணவி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். நண்பரின் உதவியுடன் டூ வீலரில் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கேளம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடக்கிறது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை