வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரூபாய் 6 கோடியில் விசாகப்பட்டினத்தில் கட்டியிருக்கிறார்கள்... தமிழகத்தில் அதற்கு 36 கோடி செலவு.
மாற்று கண்ணாடி கொண்டு வந்து சீரமைப்பு பணி! | glass bridge | Kanyakumari | Kanyakumari bridge
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா! என்ன நடந்தது? கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டது. . இதை சென்ற டிசம்பர் 30ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கண்ணாடி பாலத்தில் நடந்து கடலின் அழகினை கண்டு களிக்க ஏராளமான டூரிஸ்ட்கள் குவிய தொடங்கினர். இந்த சூழலில் பாலம் திறந்து 8 மாதங்களில் பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் திடீரென விரிசல் விழுந்துள்ளது. 37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் அதற்குள் விரிசல் விழுந்தது எப்படி என கேள்வி எழுந்தது. விரிசல் ஏற்பட்ட பகுதியை தடுப்பு வைத்து மறைத்து சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து அனுமதித்து வந்த காட்சிகள் வெளியாகி வைரலானது. முதல் கட்ட விசாரணையில் பாலத்தில் விரிசல் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. ஊழியர்கள் பணியின் போது எதிர்பாராத விதமாக சுத்தியல் விழுந்து சேதமடைந்து உள்ளது. மாற்று கண்ணாடி வரவழைக்கப்பட்டுள்ளது. பழுது பார்த்து விரைவில் சரி செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.
ரூபாய் 6 கோடியில் விசாகப்பட்டினத்தில் கட்டியிருக்கிறார்கள்... தமிழகத்தில் அதற்கு 36 கோடி செலவு.