உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் உதவியது எப்படி தெரியுமா? | Gold Medalist Arshad Nadeem | Neeraj helped

பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் உதவியது எப்படி தெரியுமா? | Gold Medalist Arshad Nadeem | Neeraj helped

தங்கம் வென்ற பாக் வீரருக்கு நீரஜ் சோப்ரா செய்த உதவி ஒலிம்பிக்கில் நெகிழ்ச்சி பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி வென்றார். பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் வெள்ளி இது என்பதால், இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்கம் வென்ற அர்ஷத் நதீமை பாகிஸ்தான் மக்கள் கொண்டாடிவருகின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அர்ஷத் நதீம் சாதனை படைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பயிற்சிக்காக புதிய ஈட்டி வாங்க அர்ஷத் நதீம் சிரமப்பட்டபோது, நீரஜ் சோப்ரா அவருக்கு உதவியது தற்போது தெரியவந்துள்ளது.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ