தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ₹2 லட்சத்தை நோக்கி பயணம் | Gold Price Surge
டிசம்பர் 15ம் தேதி ஒரு லட்சத்தை கடந்த ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, அதன் பின் சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. எப்படியும் இன்னும் விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 23 இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 770க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் 2026ம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரன் 2 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
டிச 23, 2025