எங்கே போகிறது தங்கம்? அதிர்ச்சியில் உறைந்த மக்கள் | Gold Rate 70 thousand | Chennai gold
புதிய உச்சம் தொட்ட தங்கம் 70,000ஐ நெருங்கியது சவரன் அதிர்ச்சியில் மக்கள் சர்வதேச நிலவரங்களால் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் திடீரென குறையத் துவங்கியது. கடந்த 3ம் தேதி வரை தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.அன்று ஒரு சவரன் 68,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கடுத்த 5 நாட்களில் 2,680 ரூபாய் அதிரடியாக குறைந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த 9ம் தேதியன்று காலை தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது. மீண்டும் அன்று மதியமே 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து 68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 69,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 8,745 ரூபாய். கடந்த 3 நாளில் மட்டும் சவரனுக்கு 4,160 ரூபாய் உயர்ந்து தங்கம் புதிய உச்சத்தை தொட்டதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.