உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2வது நாளாக தங்கம் விலை சரிவு அள்ளிச்செல்ல குவிந்த கூட்டம் | Gold rate| gold price decline| Chennai

2வது நாளாக தங்கம் விலை சரிவு அள்ளிச்செல்ல குவிந்த கூட்டம் | Gold rate| gold price decline| Chennai

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் 1 பவுன் 55,360 ரூபாயை தொட்டது. அதன் பின் மெல்ல சரிந்தது. நேற்று 1 பவுன் 54,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6,810க்கும் விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15ல் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. 9 சதவீத வரி குறைப்பால், தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 275 ரூபாய் குறைந்தது. 1 பவுனுக்கு 2,200 ரூபாய் குறைந்து 52,400 ரூபாய்க்கு வந்தது. வெள்ளி விலை, கிராமுக்கு 3.50 ரூபாயும், 1 கிலோவுக்கு 3,500 ரூபாயும் குறைந்தது. 2வது நாளாக இன்றும் ஆபரண தங்கத்தின் விலை 1 பவுனுக்கு 480 ரூபாய் குறைந்து 51,920க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் விலை 6,490 ரூபாய். வெள்ளி விலை 1 கிராமுக்கு 50 பைசை குறைந்து 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விலை குறைந்ததால் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகை கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்ததாக அவர்கள் கூறினர்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை