ஹிந்து சம்பிரதாயத்துக்கு எதிரானது சுங்கத்துறை செயல்பாடு | Newly Married | Gold Thalikodi | Madras HC
பெண்ணிடம் 11 சவரன் தாலி பறிமுதல் சுங்கத்துறைக்கு ஐகோர்ட் குட்டு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு அதிக எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வரக்கூடாது என சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர். உடனே, தனுஷிகா, எனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்றார். இந்த நகைகள் அனைத்தும் என்னுடைய சொந்த நகைகள். தமிழகத்தில் கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இப்படியே பிரான்ஸ் போவதால் எல்லா நகைகளையும் போட்டிருக்கிறேன் என, தனுஷிகா கூறியுள்ளார். பிரான்ஸ் போவதற்கான டிக்கெட்டையும் அவர் காட்டினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளோ அவரது சொன்னது எதையும் கேட்கவில்லை. அதிக எடை இருப்பதாக கூறி, தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷிகா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த சம்பவத்தின் போது, சுங்கத்துறையினர் தனுஷிகாவிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். சுங்கத்துறை தரப்பு வழக்கறிஞர் மனுதாரர், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் தங்க நகைகளை அணிந்தும் வர முடியாது; பையிலும் எடுத்து வர முடியாது. சட்டப்படி தான் நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தாலிக்கொடியை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரி மைதிலிக்கு கண்டனம் தெரிவித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாலியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரி மைதிலி அதை பறிமுதல் செய்துள்ளார். அவரது செயல்பாடு ஏற்புடையது அல்ல. தாலி அணிந்திருப்பது, இந்த நாட்டின் கலாசாரம். அதை கழற்றும்படி ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வதும், இந்த நாட்டின் கலாசாரத்தையும், ஹிந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாக உள்ளது. எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த அதிகாரி, கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பது போல இருக்கிறது. எனவே, சுங்கத்துறை முதன்மை கமிஷனர் விரிவான விசாரணை நடத்தவேண்டும். அதிகாரி மைதிலி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தனுஷிகாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.