வழிப்பறியில் ஈடுபட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், வி.கோட்டாவில், தங்க நகை வியாபாரி சேட்டன் குமார் என்பவர், மூன்றரை கிலோ எடையுள்ள 5 தங்க பிஸ்கட்டுகளுடன் கடந்த 2ம் தேதி காரில் சென்று கொண்டு இருந்தார். அவரது காரை வழி மறித்த ஒரு கும்பல், சேட்டன் குமாரை மிரட்டி, தங்கத்தை பறித்து சென்றது. இது பற்றி வி.கோட்டா போலீசில் புகார் தரப்பட்டது. 5 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
ஏப் 06, 2025