உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜவ்வாது மலை சிவன்கோயில் கருவறையில் கிடைத்த பொக்கிஷம் Golden treasure| Jawadu Hill Shiva Temple

ஜவ்வாது மலை சிவன்கோயில் கருவறையில் கிடைத்த பொக்கிஷம் Golden treasure| Jawadu Hill Shiva Temple

கோயிலில் தோண்டத் தோண்ட கிடைத்த தங்கப் புதையல்! திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயில், 3ம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறை பணிக்காக பள்ளம் தோண்டியபோது, தங்க காசுகள் கிடைத்தன. மேலும் தோண்டியபோது இன்னும் தங்க காசுகள் கிடைத்தன. மொத்தம் 103 தங்க காசுகள். தங்க புதையலை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். அந்த காசுகள் எந்த காலத்தை சேர்ந்தவை; அவற்றின் வரலாற்று தகவல்கள் தொடர்பான ஆய்வு செய்ய உள்ளனர். கோயில் கருவறையில் தங்க காசுகள் கிடைத்தது ஜவ்வாது மலை கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

நவ 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vijayasekar perumal Naidu
நவ 04, 2025 06:50

சிவன் கோயில் புதையல். சரி வருவாய் துறை அதிகாரிகள் பெரும்பாலும் கிறிஸ்டியன்ஸ். காசுகள் என்ன பாதுகாப்பு


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை