வாசகர்கள் கருத்துகள் ( 2 )
10000 ஆயிரத்துக்கு எத்தனை சைபர்
கண்டெடுத்த காசுகள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா கடவுளுக்கே வெளிச்சம்
ஜவ்வாது மலை சிவன் கோயில் தங்க புதையல்: ஆய்வாளர்கள் சொல்வது என்ன? | Golden treasure| Jawadu Hill
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயில் 3ம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இப்போது கோயிலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கருவறை பணிக்காக பள்ளம் தோண்டியபோது தங்க காசுகள் குவியல் குவியலாக கிடைத்தன. மொத்தம் 103 தங்க காசுகள் இருந்தது. தங்க காசுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். அந்த காசுகள் எந்த காலத்தை சேர்ந்தவை; அவற்றின் வரலாற்று தகவல்கள் தொடர்பாக ஆய்வு நடக்கிறது. இந்த நிலையில் போளூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்ட அவற்றை ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார். அப்போது தங்க காசுகள் பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் சில கணிப்புகளை கூறினர். தற்போது கண்டெடுக்கப்பட்டவை விஜயநகரப் பேரரசின் முற்கால ஆட்சியைச் சேர்ந்தவை போல தெரிகிறது. தங்க காசுகளில் உருவங்கள் இல்லாமல் குறியீடுகள் மட்டும் காணப்படுகின்றன. இங்கு தேவராயர் கால கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றனர். #GoldHoard #ShivaTemple #VijayanagaraEra #JavvadhuMalai #AncientTreasure #Tiruvannamalai #TempleRenovation
10000 ஆயிரத்துக்கு எத்தனை சைபர்
கண்டெடுத்த காசுகள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா கடவுளுக்கே வெளிச்சம்