உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுரோட்டில் டயர் இல்லாமல் இழுத்து செல்லப்பட்ட பஸ் | Government bus trouble | Tenkasi

நடுரோட்டில் டயர் இல்லாமல் இழுத்து செல்லப்பட்ட பஸ் | Government bus trouble | Tenkasi

மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. தென்காசி அருகே இடைகால் கிராமத்தை கடக்கும் போது பஸ்சின் பின் டயர் இரண்டும் தனியாக கழன்று ஓடியது. 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பஸ் நடுரோட்டில் நின்றது. Breath அரசு பஸ்களில் ஓட்டை உடைசல்களால் ஏற்பட்ட அவலங்களை தாண்டி இப்போது டயரரே கழன்று ஓடும் சம்பவம் தென்காசியில் அரங்கேறி உள்ளது. சாலையின் வளைவில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பஸ்சின் பின்பகுதி சாலையில் உரசி சென்றதில் 3 மாணவர்களுக்கு கால்களில் காயமும் ஒரு பயணிக்கு தாடையில் காயம் ஏற்பட்டது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை