உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளது; எல்பிஜி வினியோகத்தை சீராக்க நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளது; எல்பிஜி வினியோகத்தை சீராக்க நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

#LPG #Iranwar #isrealwar #GasCylinder #GasSupply #Petrol #Diesel #UnionGovernment #PetroliumMinistry ஈரான் - இஸ்ரேல் போரால், உலக நாடுகளில் எரிபொருள் சப்ளை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நம் நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி வினியோக நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவிற்கான எரிபொருள் நிரப்பி வரும் கப்பல் போக்குவரத்தை சுமுகமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலவரம் குறித்து இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. நம் நாட்டில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எல்பிஜி சிலிண்டர் வினியோகத்தில் தடை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு எண்ணெய் நிறுவனத்திலும் தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வரவில்லை.

மார் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ