விருதுநகர் அரசு ஆஸ்பிடலில் நள்ளிரவில் சதி செய்த இளைஞன் | Government Hospital |Youth arrested
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் இருந்து 24 மணி நேரமும் உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஆக்ஸிஜன் பிளான்ட்டில் இருந்து உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதில் திடீரென தடை ஏற்பட்டது. டாக்டர்கள், நர்ஸ்கள் போய் பார்த்தனர். பிளான்டில் இருந்து வார்டுகளுக்கு செல்லும் வால்வு மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வால்வை திறந்து ஆக்சிஜன் தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு கிடைப்தை டாக்டர்கள் உறுதி செய்தனர். விருதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். மல்லாங்கிணரை சேர்ந்த சரவணகுமார் ஆக்சிஜன் பிளான்ட் பராமரிப்பாளராக பணியாற்றியது தெரிய வந்தது. அவரிடம் துருவித்துருவி விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வளெிவந்தன. ஆக்சிஜன் பிளான்டை நடத்தும் தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த வாரம் 132 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அவ்ரகளில் சரவணகுமாரும் ஒருவர். வேலை போனதால் ஆத்திரமடைந்த அவர், பிளான்ட் வால்வை மூடியது விசாரணையில்தெரியவந்தது.