3 வருஷம் என்ன செஞ்சாங்க? மக்கள் உயிரில் விளையாட்டு | Government Hsopital | NOC
தமிழகத்தில் கடந்த 2022 ஜனவரி 12ல் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை தொடங்கப்பட்டன. திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. செயல்பட ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒரு சில மருத்துவமனைகள் முறையான சான்றிதழ் பெறவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டுமான பணிகள் துவங்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ், பணிகள் முடிவடைந்த பின் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முழுமை பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதே போல, தீத்தடுப்பு வசதிகள், தீயணைப்பு வாகனங்களின் மீட்பு பணிகளுக்கு தேவையான இடவசதிகள் வளாகத்தில் இருப்பதை ஆய்வு செய்த தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். நகராட்சி, மாநகராட்சியால் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் கட்டுமான பணிகளை செய்த நிறுவனம், முறையாக பணிகளை முடித்ததால் அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகளை செய்த ஒப்பந்த நிறுவனம், பணிகளை முறையாக முடிக்கவில்லை. இருப்பினும் 11 அரசு மருத்துவமனைகளும் அவசர கதியில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.