2 மணி நேரம் துடி துடித்துப்போன கர்ப்பிணி | Government Hospital | TN Health
ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியை சேர்ந்த அஜித்குமார். இவரது மனைவி சுவாதி. பிரசாவத்துக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர் இல்லை என கூறிய நர்ஸ்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பிடலுக்கு போகுமாறு கூறியுள்ளனர். பிரசவ வலியோடு துடித்த சுவாதியை ஆஸ்பிடலில் இருந்து வெளியே அனுப்பி உள்ளனர். 2 மணி நேரம் காத்து கிடந்திருந்த சுவாதி ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வசதி இல்லை. அவசர நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர் என பெண்ணின் தந்தை குற்றம் சாட்டினர்.
மார் 26, 2025