திண்டுக்கல் அரசு பள்ளியில் பகீர் சம்பவம் | Government School | School Roof
திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 400 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டடங்கள் 2009 திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. வகுப்பறையில் பல இடங்களில் பெயர்ந்து விழுந்தும், சேதமாகியும் உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதிகாரிகள் 3 மாதங்களுக்கு முன் பள்ளியை ஆய்வு செய்தனர். சேதமான சுவர்கள் சீரமைக்கப்பட்டு, பெயின்ட் அடித்து மராமத்து பணிகள் நடந்தது. அதேபோல் 4ம் வகுப்பு கட்டடத்திலும் 1 மாதத்திற்கு முன் மராமத்து பணிகள் நடந்தது. கட்டடம் சீரமைக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்போது இடிந்துள்ளது. 4ம் வகுப்பு மாணவர்கள் இருந்த வகுப்பறை கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 40க்கு மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர்.