மிகவும் பரிதாப நிலையில் மதுரை - சிவகாசி அரசு பஸ் | Govt bus | Madurai - Sivakasi | Door problem | Vi
மதுரையில் இருந்து அரசு பஸ் விருதுநகர் வழியாக சிவகாசி சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு கதவு திடீரென கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயம் படிக்கட்டில் யாரும் பயணிக்காததால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக பஸ்சை ஓரமாக நிறுத்திய டிரைவரும், கண்டக்டரும் கழன்று விழுந்த கதவை கயிற்றால் கட்டிவிட்டு மீண்டும் சிவகாசி நோக்கி புறப்பட்டனர். கதவு மீண்டும் எப்போது கழன்று விழுமோ என்ற பீதியுடனயே பின்னால் அமர்ந்திருந்த பயணிகள் கடைசி வரை பயணம் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இதேபோல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நல்ல கண்டிஷனில் உள்ள பஸ்களை இயக்கி பாதுகாப்பான பயணத்தை போக்குவரத்து துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.