உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓசூர் டு தேன்கனிக்கோட்டை இலவச பயணம்: அதிகாரிகள் அதிர்ச்சி | Govt Bus |Hosur | Driver issue

ஓசூர் டு தேன்கனிக்கோட்டை இலவச பயணம்: அதிகாரிகள் அதிர்ச்சி | Govt Bus |Hosur | Driver issue

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓசூருக்கு 1ம் நம்பர் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்தில் பிரபு என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் பஸ் ஸ்டாண்டு சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பயணிகள் ஏறி உள்ளனர். பயணிகள் ஏறும் சமயத்தில் பஸ் கண்டக்டர் டைம் கீப்பரிடம் கையெழுத்து போட சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் டிரைவர் பிரபு, பஸ்சை தேன்கனிக்கோட்டை நோக்கி ஓட்டி சென்றார். கண்டக்டர் இல்லாத நிலையில், டிக்கெட் வாங்க யாரும் வராததால் பயணிகள் டிரைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அரசாங்கம் பெண்களுக்கு மட்டும்தான் இலவச பயணம் கொடுத்து வருகிறது. ஆனால் நான் இன்று பஸ்சில் ஏறிய அனைவருக்கும் இலவச பயணம் கொடுக்கிறேன் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !