உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பஸ் படிக்கட்டில் மாணவர்கள் செய்த சேட்டையால் பரபரப்பு |Govt bus |School students |bus stairs

அரசு பஸ் படிக்கட்டில் மாணவர்கள் செய்த சேட்டையால் பரபரப்பு |Govt bus |School students |bus stairs

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து ஏராளமான மாணவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து ஆனம்பாக்கம் செல்லும் அரசு பஸ்சில் சென்றனர். பழையசீவரம் வழியாக சென்றுகொண்டிருந்த பஸ்சில் ஒரு சில பள்ளி மாணவர்கள் படிக்கட்டு, ஜன்னல் பக்கம் தொங்கியபடி பயணித்தனர். ஆபத்தான முறையில் தொங்கி சென்றது போதாது என்று சாலை ஓரம் காலை அகற்றி தேய்த்தபடி அட்டகாசம் செய்தது பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை