உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சடலத்தை கவ்விச்சென்ற நாய் அரசு ஆஸ்பிடலில் பகீர் சம்பவம் | Govt Hospital mortuary Shocking Incident

சடலத்தை கவ்விச்சென்ற நாய் அரசு ஆஸ்பிடலில் பகீர் சம்பவம் | Govt Hospital mortuary Shocking Incident

சடலத்தை கவ்விச்சென்ற நாய் அரசு மருத்துவமனையில் பகீர் வீடியோ வைரல் தெலுங்கானாவின் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள நாகசாலா கிராமத்தை சேர்ந்தவர் போலே பீமேஷ்வர் POLE BHIMESHWAR. லாரி டிரைவர். கடந்த சனிக்கிழமையன்று பணிக்கு சென்றார். வீடு திரும்பவில்லை குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர். திங்களன்று உள்ளூரில் உள்ள ஒரு குளத்தில் பீமேஷ்வர் சடலமாக மிதந்தார். சடலத்தை மீட்ட போலீசார், ஜட்சர்லா JADCHERLA அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் சடலம் வைக்கப்பட்டது. அந்நேரம், சடலங்களை பதப்படுத்தி வைப்பதற்கான குளிர் சாதன பெட்டிகள் சரியாக இயங்க வில்லை. இதனால் சடலத்தை தரையில் கிடத்தி விட்டு ஊழியர் சென்றார். அந்நேரத்தில் ஒரு நாய் பிணவறைக்குள் நுழைந்தது. இதை கவனிக்காமல் பிணவறை கதவை ஊழியர் வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் பிணவறைக்குள் நாய் சுற்றி சுற்றி வந்தது. தரையில் கிடத்தப்பட்டிருந்த சடலத்தை பார்த்ததும் பாய்ந்து சென்றது. டீ குடித்து விட்டு மீண்டும் பிணவறைக்கு ஊழியர் வந்து பார்த்தபோது தரையில் கிடத்தப்பட்டிருந்த பீமேஷ்வரின் உடலை நாய் கவ்விக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாயை விரட்டினார். ஆனால் விடாமல் சடலத்தின் கையை கடித்து இழுத்துக்கொண்டு அந்த நாய் ஓடியது. இதனை அங்கிருந்த மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தெலுங்கானா சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்மா விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ஊழியர்கள் அலட்சியமாக கவனக்குறைவுடன் செயல்பட்டதால்தான் இந்த சம்பவம் நடந்தது உறுதியானது. இதையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

மார் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை