உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு கட்டி தந்த வீடுகளின் அவலநிலை | Govt House | Vellore | Katpadi

அரசு கட்டி தந்த வீடுகளின் அவலநிலை | Govt House | Vellore | Katpadi

ேலூர் காட்பாடி அருகே ஆரிமுத்து மோட்டூரில் பார்வையற்றோர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 24 குடும்பங்களுக்கு 2020ல் அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளான நிலையில் வீடுகள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. சில வீடுகளில் சிலாப்கள் இடிந்துள்ளது. கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது. வேலூர் கலெக்டர் ஆபீஸில் 15 நாட்களுக்கு முன் இது குறித்து மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை